Tuesday, January 26, 2010

சிறு(பெரு) சேமிப்பு

சேமிப்பு என்று கேட்டவுடன் நாம் சொல்லும் முதல் வார்த்தை ஐயோ அம்மா ரொம்ப கஷ்டம். இல்லை. நம்மால் முடியாது. இப்படி ஏதோ ஒரு இனம் புரியாத பயமோ பிரமிப்போ ஆதங்கமோதான் தோன்றும். நிஜத்தில் சேமிப்பு ஒன்றும் பெரிய கஷ்டமான விஷயம் இல்லை.

ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு முறை எங்க அப்பாவை அவர் அலுவலக மேல் அதிகாரி தன் அறைக்கு வருமாறு அழைத்தார். எங்க அப்பா உள்ளே நுழைந்தவுடன் 'சார், என் மகளுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. நகை, சீர் எல்லாம் செய்தாகி விட்டது. திருமணம் நடத்த மட்டும் செலவுக்கு 2 - 3 லட்சம் தேவை படுகிறது. இந்த போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டியை எல்லாம் க்ளோஸ் பண்ணி செக் வாங்கணும். ஃபார்ம் ஃபில் பண்ணி வச்சு இருக்கேன். கொஞ்சம் பியூனை கூட்டிகிட்டு போயிட்டு வந்திடுங்க' என்றார். 'அதுக்கு என்ன சார் கண்டிப்பாக போய் வருகிறேன்' என்று சொல்லியவாறே அந்த ஃபைலை வாங்கினாராம் என் அப்பா. பைலைப் பிரித்து பார்த்தவருக்கு ஒரே அதிர்சி. என்னவென்றால் எல்லா ஆர்டியும் ரூ.50/100. ஒரே ஒரு ஆர்டி மட்டும் 250. இப்படி ஒரு 7 - 8 பாஸ் புக் இருந்ததாம். என் அப்பாவுக்கு மனதிற்குள் ஒரே நக்கல் சிரிப்பு. என்ன இவர் சிஏ படித்து இருக்கார். 50/100 ரூபாய் ஆர்டியை வைத்து லட்சமா.. ரொம்ப அதிகம் என்று நினைத்து கொண்டே போஸ்ட் ஆஃபீஸ் போனார். போஸ்ட் ஆஃபீஸ் அதிகாரி எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் இருங்கள் நான் எல்லா ஆர்டியையும் குளோஸ் பண்ணிவிட்டு ஒரே செக்காகக் கொடுத்திடறேன் என்று சொன்னார்.. அரை மணி நேரம் கழித்து வந்து ஒரு செக்கை நீட்டினாராம்.. படிப்பவர்களும் மலைக்க வேன்டாம்.. 3.8 லட்சத்திற்கு செக் வந்தது.
அலுவலகம் நுழைந்தவுடன் என் அப்பா அந்த செக்கை தன் உயர் அதிகாரியிடம் நீட்டும் போது சொல்லியே விட்டாராம், சார் நீங்கள் ஃபைலை கொடுத்தவுடன் நான் நினைத்தேன் இந்த ஆர்டியை குளோஓஸ் பண்ணினால் 75 ஆயிரம் - 1 லட்சம் வரை வரும் என்று. கடைசியில் பார்த்தால் 3.8 லட்சம் நம்பவே முடியவில்லை சார் எப்பிடி நீங்கள் எப்பிடி சேமித்தீர்கள்?'
பாருங்கள் சார், நாம் எல்லாம் மிடில் கிளாசில் பிறந்தவர்கள். என் மகளின் திருமணம் என் கனவு. அதனால் அவள் பிறந்தது முதல் நான் சேமித்தேன் ஒரு வருடம் ரூ.50 ஆர்டி. அடுத்த வருடம் ரூ.100 இப்பிடி. இப்போது பாருங்கள் என் மகளின் திருமண செலவு பட்ஜெட் 3 லட்சம் (சில வருடங்கள் முன்) என்னிடம் 80 ஆயிரம் (30%) அதிகமாய் இருக்கிறது. அவளின் திருமணத்தில் நான் மேடையில் இருக்கும் போது அவளின் மண கோலத்தையும் வெட்கத்தையும் பூரிப்பையும் பார்த்து சந்தோஷமாய் மகிழ்ந்து என் கனவு மெய்ப்படுவதை கண்ணார கண்டு கொண்டிருப்பேன்.. இல்லை என்றால் கடவுளே எதிர்பார்த்ததை விட நிறைய பேர் சாப்பிட வருவார்களோ. பந்தியில் நிறைய வேஸ்ட் ஆகுமோ. கரண்ட் பில் நிறைய வருமோ இருக்கின்ற பணம் போதுமோ. இல்லை என்றால் யாரிடம் கடன் வாங்குவது என்றே யோசித்து கொண்டு . ஒரு கசப்பான / வருத்தமான மனநிலையில் என் மகளுக்கு அக்ஷதை போட வேண்டி இருக்கும். நல்ல ப்ளானிங் இருந்தால் மட்டுமே சில சந்தோஷங்களை கூட சந்தோஷமாய் அனுபவிக்க முடியும்' என்றராம்.
நிஜம்தான். நாம் இன்று இருக்கும் ப்ரைவேட் செக்டாரில் வேலை நிரந்தரம் இல்லை செலவுகள் அதிகம். சேமிப்பின் பயனை நாம் அறிந்து/புரிந்து/பயன்படுத்துவது மிக மிக அவசியம். நம் குழந்தைகளின் திருமணமோ அல்லது அயல் நாட்டு மேற்படிப்போ அவர்கள் என்ன ஆசை பட்டாலும் அதை தர கூடிய நிலையில் நாம் இருப்பது என்பது அவர்களிடம் நம் மரியாதையை உயர்த்துமோ தெரியாது ஆனால் 50 வயதில் நமக்கு பெரிய திருப்தியை நிச்சயம் தரும். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள் . ஒரு லட்சம் சேர 100 ஆயிரம் தேவை. 1 ஆயிரம் சேர 100 ரூ.10 தேவை. எனவே ரூ.10 முதல் ஆரம்பிப்போம் லட்சத்தை தொடும் லக்ஷியம் ஒன்றும் தூரத்தில் இல்லை.

No comments:

Post a Comment